அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதர்
சுவாமி திருக்கோயில், திருத்தியமலை

திருத்தியமலை

அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதர் குடிகொண்டிருக்கும் ஸ்தலம். இந்த ஸ்தலத்திற்கு திருதேசமலை / திருத்தேஜோமலை என்ற வேறு பெயர்களும் இருந்த‍தாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஸ்தலம் முசிறிக்கு 18கி.மீ கிழக்கிலும், திருச்சியிலுருந்து 35கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. திருத்தியமலை ஒரு கால கட்டத்தில் பரந்து, விரிந்து, விஸ்தாரமான நிலப்பரப்புடன் மலைக் குன்றுகளால் சூழப்பட்டு இருந்தது. இத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இங்கு லிங்கத்திற்கு திங்கள் தோறும் வில்வ இலைகளைக் கொண்டும், ஆவுடையருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம்.

அம்பிகை ஆனவள் ஒரு தாயை விட அதிகம் கருணை காட்டுவதால், "தாயினும் நல்லாள்" என்ற பெயர் சூடிக்கொண்டு இங்கு அருட்பாலிக்கின்றாள். அம்பாளுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, மற்றும் சுருள் குழல் நாயகி என்ற வேறு பெயர்களும் உண்டு. அருள்மிகு சுப்ரமணியர் "ஷத்ரு ஸம்ஹார" கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை வணங்கி வேண்டினால் ஷத்ருக்கள் / எதிரிகள் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர் அன்னை விசாலாட்சி சமேதமாய் காட்சியளிக்கின்றார். மஹாலஷ்மி, பைரவர், சூரியன், சண்டிகேஷ்வரர், குருபகவான் தனித்தனியாக காணப்படுகின்றனர். மேலும் நவகிரக சன்னிதியையும் காணலாம். பிருங்கி, அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா மாமுனிவர்கள் வழிபட்ட ஸ்தலம் . இம்மலைக் கோயிலின் அடிவாரத்தில் ஒருபுறம் ஆலமரத்தடி ஐயனார் (சாஸ்தா), மற்றொரு புறம் மாரியம்மன் சன்னதியும் இருப்பதைகாணலாம். சற்றே தொலைவில் அக்ரஹார விநாயகரையும் தரிசிக்கலாம்.

மேலும்
  • 24.06.2015 ஆனி உத்திர தரிசனம்
  • 01.09.2015 மஹா சங்கடஹர சதுர்த்தி
  • 17.09.2015 விநாயகர் சதுர்த்தி
  • 13.10.2015 to
    22.10.2015
    நவராத்திரி வழிபாடு ( 9 நாள் விஷேச வழிபாடு )
  • 17.11.2015 கந்த ஷஷ்டி பெரு விழா
  • 25.11.2015 திரு கார்த்திகை தீபம்